உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு
வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு
19-12-2009 காரிக்கிழமை(சனிக்கிழமை) அன்று வியாழன் கோள் மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி
சோதிட ரீதியாக இதனால், சில இராசிக்காரர்களுக்கு ஆக்கமும், சில இராசிக்காரர்களுக்குத் தாக்கமும் ஏற்படுவது இயல்பு. மழை பெய்தால் விவசாயிகளுக்கு நன்மை; சூளை வியாபாரிகளுக்குப் பாதிப்பு. ஆடிக்காற்றால் வெப்பம் குறையும்; ஆனால் உப்பு வியாபாரிகளுக்கு அது ஆகாது. அது போல குரு அவருடைய வழியில்இ ஓர் இராசியிலிருந்து இன்னொரு இராசிக்குப் போய் அமர்கிறார். அது சிலருக்குப் புத்துணர்வையும் சிலருக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துவது இயற்கை நிகழ்வு. வரும் திசம்பரில் நிகழ்வுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த இராசிக்காரர்களுக்கு என்னென்ன நேர்வுகள் என்பதை இங்கே காண்போம்.
நன்மை: மேடம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்.
எச்சரிக்கை: மீனம், ரிடபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுர், கும்பம்.
நல்லவேளை! பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு அதிலிருந்து மீண்டு தெம்பும், துணிவும், தெளிவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், கோள்கள் எல்லாம் அண்ட கோடிகளை எல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் ஆற்றி ஆன்ம கோடிகளைக் காத்துவரும் பரம்பொருளின் ஏவலால் இறைபணியை ஆற்றுவன.
அப்பரம்பொருளிடம் உருகிய உள்ளத்தால் விண்ணப்பம் வைப்போம்! அவன் கருணையினால் கட்டளை இட அவன் பணி ஆற்றும் கோளாகிய குரு, பாதிப்புகளை இல்லை எனும்படியோ அல்லது தெரியாதபடியோ நிச்சயம் செய்து விடுவார்.
அப்பரம்பொருளோ, தமிழ் மொழிக்குச் சங்கம் வைத்தது, தமிழால் வைதாரையும் வாழ வைப்பது. எனவே பாதிப்பு இராசிக்காரர்களுக்காக, பரம்பொருளுக்கு விருப்பமான பைந்தமிழில் வேள்வி செய்ய தமிழ்வழிபாட்டுப் பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள் இறைவனிடம் தமிழ் வேள்வி வழிபாடு செய்யின் நன்மையே நடைபெறுவது திண்ணம்.
"ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே"
| நேரம் | : | 19-12-2009 அன்று காலை 7.15 மணி முதல் நல்ஓரையில் |
| நிகழ்த்துபவர் | : | சிவ.மு.பெ.சத்தியவேல் முருகனார்,B.E.,M.A.,M.Phil |
| கட்டணம் | : | ஒருவருக்கு ரூ.150/- |
| இடம் | : | பத்மாவதி திருமண மண்டபம், சைதாபேட்டை |
குறிப்பு: மணியார்டர் படிவத்தில் தகவலுக்கான இடத்தில் பெயர், நட்சத்திரம், கோத்திரம், முகவரி ஆகிய விவரங்களை தரவும்.
|
நேரில் வர இயலாதவர்களுக்கு அருட்பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். |
தொடர்புக்கு-மணியார்டர் அனுப்ப,
Dheiva Murasu
9/1 Manjolai First Street, Kalaimagal nagar
Ekkaduthangal, Chennai (Madras) 600 032
Tamilnadu, India.
Phone : 91-44-2225 0643, 91-44-2225 0964.
email : shri@pppindia.com
நிகழ்வுகள்

18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை
சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

18th year - Thirumanthiram Recital (3rd Round)
A Three Day Program :: 2nd - 4th Jan 2009
Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!
படைப்புகள்
குற்றக்கழுவாய்
(பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும்
அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ
வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன்
பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும்
"சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.
வண்டமிழில்
வாழ்வியல் சடங்குகள் :
நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.
திருமுருகாற்றுப்
படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம்
ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச்
சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.


