உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
தெய்வமுரசு ஆன்மீக மாத இதழ்
தமிழ்
உணர்வு பொங்க வரும் தனித்தன்மை உடைய ஆன்மீக மாத இதழ். நாடறிந்த திருமந்திரத்
தமிழ்மாமணி, செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் ஆசிரியராக
இருந்து அரிய தலையங்கங்களை எழுதுகிறார்.
ஆன்மீகமும்,
அருந்தமிழும் கலந்த அற்புதமான மாத இதழ்.
உண்மை பத்தி நெறியை
உலகில் நிலைநாட்ட வரும் ஒரே இதழ்.
தமிழின்
மாண்புகளும் திருமுறை பெருமைகளும் இணைந்து உருக்கி வார்த்த வேலாக உலாவுகிறது
இந்த மாத இதழ்.
தமிழ் அறிஞர்களின்
கட்டுரைகளும், சுவையான பேட்டிகளும் நிறைந்த இதழ்.
சிக்கல்
நிறைந்த கேள்விகளுக்கெல்லாம் தக்க பதில்களைத் தாங்கி சுந்தரத்தமிழில் சுடச்சுட
வரும் "தொளைத்ததும் முளைத்ததும்" என்ற கேள்வி - பதில் பகுதி.
நடைமுறை வாழ்வில் விடைமுறை
கிடைக்காத அவ்வப்போதைய ஆன்மிக பிரச்சனைகளை அலசி ஆராய்கின்ற ஒரே சிறப்பு
இதழ்.
நிகழ்வுகள்

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

17-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
மூன்று நாள் விழா! 4-1-2008, வெள்ளி முதல் 6-1-2008, ஞாயிறு வரை
சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஐந்தாம் தந்திரம் முற்றோதல்.

17th year - Thirumanthiram Recital (3rd Round)
A Three Day Program :: 4th - 6th Jan 2008
Full Recitation of 5th Tanitram - in Seven sittings.
படைப்புகள்
குற்றக்கழுவாய்
(பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும்
அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ
வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன்
பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும்
"சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.
வண்டமிழில்
வாழ்வியல் சடங்குகள் :
நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.
திருமுருகாற்றுப்
படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம்
ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச்
சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.