தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

பழுதை நீக்க வந்த பழந்தை - தமிழக முதலமைச்சருக்கு நன்றி


தெய்வத்தமிழ்

Big Image

தமிழைத் தெய்வத்தமிழ் என்று ஆன்றோர் அழைப்பர். வேறு எந்த மொழியும் இப்படித் தெய்வத்தோடு இணைத்துப் பேசப்படும் சிறப்பைப் பெறவில்லை. ஆனால், இன்று திருக்கோயில்களில் தெய்வத்தின் முன் தெய்வத் தமிழைக் காணோம் ! இதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழியல்லாத புரியாத வேற்றுமொழியில் செய்யும் இடைவழி வந்த முடைநாற்றப் பழக்கம். இதை நீக்கி, மக்களைத் தெய்வீக வாழ்வை மேலிடச் செய்வதற்காகும் சீரிய தொண்டை அமைத்துக் காட்டும் முறையில் அமைக்கப்பெற்ற இணையதளம் இது.

தெய்வமுரசு சந்தா    Subscribe Dheiva Murasu

வாழ்த்துச் செய்தி


26.12.2007


அன்புடையீர்,
வணக்கம்.

பதினேழாவது ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா அழைப்பிதழ் வரப்பெற்றேன்.

மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இந்த திருமந்திர முற்றோதல் ஏழு அமர்வுகளாகப் பிரித்து ஒவ்வொரு அமர்விலும் அறிஞர் பெருமக்கள் திருமந்திர விரிவுரை வழங்குவது சிறப்பிற்குரியது.

நிறைவாக அறிஞர் பெருமக்களுக்கு பொற்கிழியும், பொன்னாடையும், விருதும் வழங்கி தவத்திரு முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்குவது விழாவிற்கு சிறப்பும், பொலிவும் தருவதாகும்.

இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக dheivathamizh.org என்கிற இணையதளம் தொடங்கப்படுகிறது.

அம்பலம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு வெட்டவெளி என்பது பொருள். அவர் பேசியது அம்பலமாயிற்று என்று பேச்சு வழக்கில் கூறக் கேட்டிருக்கிறோம். அவர் சொன்னது வெட்டவெளியாயிற்று என்று புரிந்து கொள்கிறோம்.

அண்டவெளி பேரம்பலம் என்றால் தில்லையில் அதன் பகுதியாக உள்ளவெளி சிற்றம்பலம். இந்த ஈரம்பலத்திலும் இறைச் சத்தி வழிந்து கொண்டிருக்கிறது. எங்கும் வழிந்து கொண்டிருக்கும் இந்த இறைச் சத்தி தில்லை அம்பலத்தில் அருட்டமிழால் "உலகெலாம்" என மொழிந்தது என்பது வரலாறு.

அன்று இறைவன் சிற்றம்பலத்தில் மொழிந்த தெய்வத்தமிழை, இன்று அண்ட வெளியாகிய பேரம்பலத்தில் பரப்பத் தோன்றி உள்ளது dheivathamizh.org என்கிற இந்தப் புதிய இணையதளம்.

நீடுலகில் நீடிய புகழை நிலை நிறுத்திய மதுரை 291-வது பட்டத்து குருமகா சந்நிதானமான சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் அருவமான ஆவிகளோடு பேசுவதில் வல்லவராய் இருந்தார். அவரைக் குருவாகக் கொண்ட இந்த மன்றம் அவரைப் போலவே அருவமான ஆகாயத்தில் அருட்டமிழைப் பரப்பப் புறப்பட்டிருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.

பரப்பப்போவது தெய்வத்தமிழ் ஆதலால் இந்த இணைய தளம் தெய்வம் போலவும், தமிழ் போலவும் நின்று நிலைத்து நீடிக்குமாக என்று வாழ்த்துகிறேன்.

திருமந்திர முற்றோதல் விழாவை பதினேழு ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வரும் இருபெரும் அமைப்பு சார்ந்த அன்பர்களைப் பாராட்டுகிறேன். விழா சிறக்க வாழ்த்துகிறேன்.


தங்கள் அன்புள்ள
(நா. மகாலிங்கம்)

நிறுவனர்
சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு
ஆராய்ச்சி மன்றம்,
தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மையம்.
முருகா ஃபிளாட்ஸ்,
12/F1, 11 ஆவது தெரு, நியூ காலனி,
சென்னை 600 088.

 

செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல்

Big Image

2000-த்தாண்டின் அற்புதம் இத்தலைமுறை காணும் - செந்தமிழாகமக் குடநீராட்டு நன்னூல். தமிழர்களின் அநுபவத் தெளிவாலும் ஆன்மீகப் பயிற்சியாலும் அருளானுபவச் செழிப்பினாலும் உண்டாக்கப் பெற்ற பண்பாட்டு உறைவிடமே தமிழகத் திருக்கோயில்கள். திருக்கோயில் அமைப்பு முறை, திருவுருவத் திருமேனிகளைப் பிரதிட்டை செய்யும் முறை, பூசை முறை, செயல்முறை விதிகள், விளக்கங்கள் ஆகியவை பிற மொழியில் இருந்த காரணத்தால் தமிழகத் திருக்கோயிற் செயல்முறை விளக்கங்கள் தமிழக மக்களின் வாழ்வியலை விட்டு நெடுந்தூரம் விலகியே போய்விட்டன. அத்தகைய குறையை நீக்க அமைக்கப்பெற்ற அரிய நூலாகும் இது.

நிகழ்வுகள்

Image 18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை

சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

மேலும் அறிய...

Image 18th year - Thirumanthiram Recital (3rd Round)

A Three Day Program :: 2nd - 4th Jan 2009

Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

To Know More...

Image

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

மேலும் அறிய...

 

Image17 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா ஒளிக்காட்சிகள்.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

 

படைப்புகள்

Imageகுற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

மேலும் அறிய...

Imageவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் :

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

மேலும் அறிய...

Imageதிருமுருகாற்றுப் படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

மேலும் அறிய...