தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

 * தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள் * ----------* The Special features of Tamil Thirumurai Thirumanam*


செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல்

Big Image

2000-த்தாண்டின் அற்புதம் இத்தலைமுறை காணும் - செந்தமிழாகமக் குடநீராட்டு நன்னூல். தமிழர்களின் அநுபவத் தெளிவாலும் ஆன்மீகப் பயிற்சியாலும் அருளானுபவச் செழிப்பினாலும் உண்டாக்கப் பெற்ற பண்பாட்டு உறைவிடமே தமிழகத் திருக்கோயில்கள். திருக்கோயில் அமைப்பு முறை, திருவுருவத் திருமேனிகளைப் பிரதிட்டை செய்யும் முறை, பூசை முறை, செயல்முறை விதிகள், விளக்கங்கள் ஆகியவை பிற மொழியில் இருந்த காரணத்தால் தமிழகத் திருக்கோயிற் செயல்முறை விளக்கங்கள் தமிழக மக்களின் வாழ்வியலை விட்டு நெடுந்தூரம் விலகியே போய்விட்டன. அத்தகைய குறையை நீக்க அமைக்கப்பெற்ற அரிய நூலாகும் இது.

 

 

குற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு

Big Image

இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் "அறிவோடு அர்ச்சித்தல்" என்பது "அறிவு" என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார்.

இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.


Order

 

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

Big Image

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

அறிவார்ந்த சடங்குகள் 15 மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றைத் தமிழ் மந்திரங்களால் எங்ஙனம் ஆற்றுவது என்று தெளிவான விளக்கங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.திருமுருகாற்றுப்படை

Big Image

திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப்படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நநூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

5 கதாபாத்திரங்களைக் கொண்டு ( நக்கீரர், அவர் சீடர், அருணகிரியார், நம்பியாண்டார் நம்பி, வாசகர் ஆகிய நாம்) ஒரு நாடகத்தை உருவாக்கி ஆறுபடை வீட்டிற்கும் அழைத்துச் சென்று நமக்கு வழிகாட்டியாய் விளங்கி அரிய நுட்பங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே வந்திருக்கிற உரை நூல்களில் சில அங்கும் இங்கும் உதவுவனவாகவும், சில போதியதாக இல்லாதவையாகவும் இருப்பதைக் கண்டு புதியதொரு உரை நூலாக யாக்கப்பட்டுள்ளது.

Order

சித்தாந்தச் சிந்தனைத்தேன் (குறுந்தகடு)

Big Image

The Saiva Siddhantha philosophy is the choicest product of Dravidian intellect. - G.U.Pope.
The unique position of Saiva Siddhantha in the history of thought is the fact that it expounds by careful reflection the systematic account of the process of cosmic evolution which attempts to comprehend the universe as a sum total of 36 categories. This exposition is no mere metaphysical speculation but is purely a logical account on scientific principles. - Theos Bernard

12 Axiomatic Stanzas(Sutrams)
15 Discourses
5 CD’s
16 Hours of Speech
Esoteric Siddhantha made exoteric
and simple with striking explanations


Order

நிகழ்வுகள்

Image21 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஒளிக்காட்சிகள்

 

 

Image

 

வள்ளிமலை படிவிழாவில் பாம்பன் சுவாமிகள்

 

மேலும் அறிய...

 

DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY

 

மேலும் அறிய...

Image 18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை

சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

மேலும் அறிய...

Image 18th year - Thirumanthiram Recital (3rd Round)

A Three Day Program :: 2nd - 4th Jan 2009

Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

To Know More...

Image

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

மேலும் அறிய...

 

Image18 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா ஒளிக்காட்சிகள்.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

 

படைப்புகள்

Imageகுற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

மேலும் அறிய...

Imageவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் :

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

மேலும் அறிய...

Imageதிருமுருகாற்றுப் படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

மேலும் அறிய...