தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

பழுதை நீக்க வந்த பழந்தை - தமிழக முதலமைச்சருக்கு நன்றி


மு.பெ. சத்தியவேல் முருகனார்

Big Image

விடுதலைப் போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு.பெருமாள் - காமாட்சி தம்பதிகளின் புதல்வர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர்.
தமிழ்மறை குடமுழுக்குகள் 1000-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 900-க்கு மேலும் ஆற்றியுள்ளார்.
அறநிலையைத் துறை மூலமாக ஓதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து மக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர், மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர்.
தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப்பெரிய சைவசித்தாந்த அறிஞர்.

M.P. Sathyavel Muruganar

Big Image

Senthamizh Velvi Chadurar, Siddhanta Kavimani M.P. Sathiyavel Muruganar B.E. M.A.

Hailing from Vellore, a town in TamilNadu, Thiru M.P. Sathiyavel Muruganar is basically an engineer graduated in Annamalai University. His father M.Perumal is a freedom fighter and had written about 50 books on various branches of interest in Saivism.

Apart from the credits inherited from his father, he had the Godsent opportunity of shaping himself in association with Late Kriupananda Variyar, his relative and a great savant known all over the world.

M.P. Sathiyavel Muruganar is an accomplished speaker and a Tamil poet too. He had worked in Tamilnadu Electricity Board as Executive Engineer and voluntarily retired foregoing his service only to server the cause of Tamil Tradition and Literature. He is a great warrior par excellence in the field of promoting the cause of Tamil Worship, Culture and Saiva Siddhantha .

He is a member of the committee of High Command nominated by the Govt.of TamilNadu for review of Archakar Training Schools organised to train all those interested in serving the temples as Archkars without bar on caste. He has also rendered his services as a member of TextBook Committee in prescribing the texts for Archkars. It is noteworthy that extracts of his books are prescribed by the government as authorised texts.

One of his Yoeman Services rendered to the School of Thought of Saiva Siddhantha is a CD album rendered by him namely "Sweet Thoughts of Saiva Siddhantham". The album consists of 5 CDs comprising 15 lecturers, running for about 5 hours. He has a style and diction of his own in presentation that hearing of which is an religious ecstasy of coming to grips with logical truths of Saiva Siddhantha hidden hitherto.

He has travelled widely across the world carrying his mission and message and visited SriLanka,Malaysia,Singapore,Penang and Mauritius. He has presented papers in many international seminars. So has he appeared in many TV Programmes too both in India and aboard.

Some of the books authored by him are listed here in ::

Variyar Swamigal Varalaru Potri 400
Panniru Thirumurai Potri Vazhipadu
Panniru Thirumurai Potri 108
Santhana Kuravar Potri 108
Ambikai Potri Ainguru nooru
Thouthiyam - Pambam Swamigal Nool - a Treatise
Thirumanthira Sinthanaigal
Thamizh Velvi
Thiruvarut Prakasa Vallalar Araneriyum Amaippugalum
Saiva Sidhantha Parinaama Valarchi
Siva Velvi Patal Thirattu
Uzhum Uyar Kural Moondrum
Kasi Matamey Kalakkam yean ?
Ivarey Saivar Inithey Kaanga
Thirumanthiram Paayiram - An Introduction
Senthamizh Aagama Kutaneerattu Nannool
Vantamizhil Vazhviya Satangugal
Saravana Peruman Sarana Thuthi
Karuvuru Arivu Kovai(in print)
Thirukkural Mummani Kovai(in print)
Ulla Killiyin Killai Kooval(in print)
Valliammai Potri
Thirumurugatru Padai
Thamizh marai Savai Anuthanam
Pradhosha Vazhipadu - Ullurai
Guru Poosai - Shanmugham Kavasam(in pipeline)
Agathinai Neriyea Arulthamizh Pivaineri(in pipeline)
Vinayakar Ahaval(in pipeline)

CD ::
Sweet thoughts of Siddhantham - Siddanadha Chinthanai Then

நிகழ்வுகள்

Image 18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை

சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

மேலும் அறிய...

Image 18th year - Thirumanthiram Recital (3rd Round)

A Three Day Program :: 2nd - 4th Jan 2009

Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

To Know More...

Image

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!

மேலும் அறிய...

 

Image17 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா ஒளிக்காட்சிகள்.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள்

 

படைப்புகள்

Imageகுற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும் "சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.

மேலும் அறிய...

Imageவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் :

நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.

சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.

மேலும் அறிய...

Imageதிருமுருகாற்றுப் படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

மேலும் அறிய...