உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.
வள்ளிமலை படிவிழாவில் பாம்பன் சுவாமிகள் - செய்தி அறிக்கை
செய்தி அறிக்கை
நடந்தது எதுவோ அது செய்தி; நடவாதது நடந்தால் அது அதிசயம்; நம்ப முடியாதது நடந்தால் அது அற்புதம்.
இப்படி ஓர் அற்புதம் தான் வேலூர் அருகே உள்ள வள்ளிமலையில் 13-1-2009 அன்று நடந்துள்ளது.
பொதுவாக சூக்கும உருவங்கள் அல்லது ஆவி உருவங்களைப் பலர் நம்புவதில்லை; அவை புகைப்படத்தில் சிக்குவதும் இல்லை. ஆனால் வள்ளிமலையில் 61-ஆம் ஆண்டு மலைவலம்-படிவிழாவில் மலைப்பாதையில் அன்பர்கள் திருப்புகழ்-திருமுறைப் பாராயணம் செய்து கொண்டு சென்ற போது திரு.T.சிவானந்தம் என்கிற சென்னை அன்பர் ஒருவர் செல்போன் காமராவில் படமெடுத்து வந்து அதைக் குறுந்தகடாக்கிப் போட்டுப் பார்த்த போது சுமார் 85 ஆண்டுகட்கு முன் மறைந்த முருகன் அருள் பெற்ற அடியவரான பாம்பன் சுவாமிகள் மலையின் மீது சூக்கும உருவில் அமர்ந்திருந்தது பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏசு மறைந்த பின் உயிர்தெழுந்து சிலருக்குச் சூக்கும உருவில் காட்சி அளித்ததாகக் கூறுவர். இப்படியே வள்ளலாரைப் பற்றியும் கூறுவதுண்டு. அண்மையில் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் ஒரு தவமுனிவர் காட்சி அளித்தார் என்று தொலைக்காட்சிகளும் ஒளிப்படக் காட்சிகளைக் காட்டின. இதனை மெய்ப்பிப்பதாக இப்போது பாம்பன் சுவாமிகள் காட்சிப்பதிவு கிடைத்துள்ளது.
எங்களது ‘தெய்வமுரசு’ இதழில் (மார்ச் 2009) படமும் கட்டுரையும் வெளியிட்டோம். உரிய குறுந்தகடும் வேண்டுவார்க்கு அளிக்கப்படுகின்றன.
மேற்கூறிய 61-ஆம் ஆண்டு மலைவலம்-படிவிழாவை வேலூர் ஸ்ரீவள்ளிமணாளர் திருப்புகழ் பாராயண சங்கமும், வேலூர் ஜலகண்டேசுவரர் தருமஸ்தாபனமும் இணைந்து நடத்தியது. சங்கத்தின் செயலாளரும், தெய்வமுரசு ஆசிரியருமான திரு.மு.பெ.சத்தியவேல்முருகனார் தலைமையில் மேற்கூறிய மலைவலம் நடந்தது. வழக்கமாக தமிழ்ப்புத்தாண்டு முன்னாளில் அதாவது பங்குனி இறுதி நாளில் நடைபெறும் இவ்விழா இம்முறை தைப்புத்தாண்டு முன்னாளில் நடைபெற்றது.
தைம் முதலே தமிழ்ப்புத்தாண்டு என்பதையும், தெய்வமுரசின் தமிழ் வழிபாட்டுப் பணிகளையும் தமிழ் நாட்காட்டி உருவாக்கத்தையும் ஆசிபுரியவே பாம்பன் சுவாமிகள் எழுந்தருளிக் காட்சி அளித்ததாகக் கருதி தமிழ் ஆர்வலர்கள் உற்சாகம் பெற்றுள்ளனர்.
PRESS RELEASE
That which happens is news; That, not happened in the past, but happens is wonder; That which is unbelievable but happens is miracle.
Yes, such a miracle has happened in Vallimalai, near Vellore on 13-1-2009.
Normally, people do not believe in apparitions; more so are they elusive to photographs. Astoundingly, one Thiru.T.Sivanandam (Chennai) when screening a CD recording as transferred from cell phone, made during 61st annual foot-circuit of Vallimalai, taken by devotees with recital of Thirumurai-Thiruppugazh, has glimpsed of the recording of Pamban Swamigal, a staunch devote of Lord Muruga and God-owned Saint, after his demise of about 85 years, sitting on the silhouette of the mountain and gazing the devotees.
We have heard of Jesus’ resurrection and his apparitions and much in the same way that of Vallalar. Recently the TV channels have also telecast the recording of an ascetic with astral body floating in the air, at Thiruvannamalai. Now in line, a news of Pamban Swamigal has come to light in proof of astral bodies.
The news with photograph and article has been published in our monthly magazine Dheiva Murasu (Mar 2009). We have also made out copies of CD for those of interest.
The 61st annual foot-circuit of Vallimalai was organized by Vellore Sri Vallimalai Thiruppugazh Parayana Sangam and Vellore Jalakanteswara Dharmasthapanam jointly. The foot-circuit was presided over by our Editor namely Thiru.M.P.Sathiyavel Muruganar, who is also the secretary of the Sangam said above. The foot-circuit normally would come off a day prior to chitrai first, this time, with reference to Thai taking Thai first as Tamil New year.
The devotees are of the opinion that Pamban Swamigal, in recognition of adopting of Tamil New Year in Thai, various Tamil services rendered and Tamil Calendar brought out by Dheiva Murasu had appeared such as above and benedicted.
நிகழ்வுகள்

18-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
மூன்று நாள் விழா! 2-1-2009, வெள்ளி முதல் 4-1-2009, ஞாயிறு வரை
சைவசித்தாந்தச் செந்நெறி விளக்கும் ஆறாம் தந்திரம் முற்றோதல்.

18th year - Thirumanthiram Recital (3rd Round)
A Three Day Program :: 2nd - 4th Jan 2009
Full Recitation of 6th Thanthiram - in Nine sittings.

தமிழறிஞர்கள் யாவரும் கொண்ட முடிவை ஏற்று தமிழக முதலமைச்சர் அறிவித்த வேகத்தில் இடையீடு விழாமல் அரசாணைக்கு ஏற்பாடு செய்தமைக்கு எட்டு கோடி தமிழர்களும் அவரை விட்டுக் கொடுக்காமல் திசை நோக்கி வணங்குவதே கடன்!
படைப்புகள்
குற்றக்கழுவாய்
(பிரதோஷ) வழிபாடு:
இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும்
அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். சிறப்புமிக்க பிரதோஷ
வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன்
பொருள் என்ன? என்பதையெல்லாம் இந்நூலில் "உள்ளுறை" என்ற பகுதியிலும்
"சிறப்பு" என்ற தலைப்பில் அதன் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுயுள்ளது.
வண்டமிழில்
வாழ்வியல் சடங்குகள் :
நமது நாட்டில் குழந்தையைத் "தொட்டில் இடுதல்" ஆகிய தொடக்கம் முதல் "திருவடிப்பேறு" ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன.
சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய எழுந்ததே இந்நூல்.
திருமுருகாற்றுப்
படை:
திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம்
ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப் படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்நூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச்
சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

